மாணவர்களுக்கு இனி புதிய பாடத்திட்டம்-பிரதமர் சற்று முன் அதிரடி அறிவிப்பு..!

 2026 ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆசிரியர் பயிற்சி குறித்த கலந்துரையாடல் நேற்று (16) மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள் | New School Syllabus In Sri Lanka Next Year

மேலும் 2028 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்புக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

2029-ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படும் எனவும் மற்றும் தரம் 9 முதல் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் கூறினார்.

கல்வி சீர்திருத்தங்கள் பாடத்திட்டத் திருத்தம், ஆசிரியர் பயிற்சி, நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் தொடர்பு செயல்முறை, முறையான மதிப்பீடு ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும், மனப்பான்மை நிறைந்த ஆசிரியர்களை உருவாக்குவது தேசிய கல்வி நிறுவனங்களின் பொறுப்பு எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post