பொலிஸ் சீருடையில் 20 வயது கள்ளக்காதலியுடன் விடுதியில் உல்லாசமாய் இருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி..!

 


பொலிஸ் சீருடையுடன் விடுதியில் தனது திருமணத்திற்கு புறம்பான உறவில் கள்ளக்காதலியுடன் இருந்த 40 வயதான சார்ஜன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கில் சாட்சி அளிப்பதற்காக, கம்பளை பொலிஸ் நிலையத்தில் இருந்து நாவலப்பிட்டி நீதிமன்றத்துக்கு சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதான சார்ஜன்ட், தனது 20 வயதான கள்ளக்காதலியுடன் விடுதியில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அவர், கம்பளை பொலிஸ் அதிகாரி கமல் ஆரியவங்சவினால், திங்கட்கிழமை (16) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர் கம்பளை பொலிஸில் போக்குவரத்து பிரிவில் சேவையாற்றியவர். அவர், பொலிஸ் அவசர அழைப்பு பிரிவில் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர், நாவலப்பிட்டி பொலிஸில் சில காலம் சேவையாற்றியுள்ளார். அப்போது 20 வயதான யுவதியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். அதன்பின்னரே, கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு அவர் இட மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர், நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் ஒரு வழக்குக்கு சீருடையில் சென்றுள்ளார்., அவர் இந்த இளம் பெண்ணை , நாவலப்பிட்டி மீபிடிய பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதை அறிந்ததும், அந்த யுவதியின் தாயும் சகோதரனும் ஹோட்டல் அறைக்கு விரைந்து சென்று தங்கள் மகளை தேடினார். சார்ஜென்ட் தாயைத் தாக்கி தனது மகளை கடத்திச் சென்றுவிட்டார் இதுதொடர்பாக, தாயார் நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்., மேலும் அந்த தாய் நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், சார்ஜென்டும் அந்த யுவதியும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று, பின்னர் சகோதரனால் தாங்கள் தாக்குதல்களுக்கு உள்ளானதாகக் கூறி கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த பொலிஸ் அதிகாரி, சீருடையை அணிந்திருந்தபோது திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை நடத்திய பின்னர் கம்பளை பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post