வாரியபொல அநுராதபுரம் வீதி வளல்ல பிரதேசத்தில் சாரதியின் நித்திரைக் கலக்கத்தால் லொறி ஒன்று நான்கு கார்களை மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
ஒலி உபகரணங்களை வேறொரு பகுதிக்கு லொறி ஒன்றின் மூலம் ஏற்றிக் கொண்டு பயணித்த வேளை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதியின் நித்திரைக் கலக்கத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக வாரியபொல பொலிஸார் குறிப்பிட்டனர்.
சாரதி காயம் ஏற்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாகனம் நான்கு கார்களை மோதிய பின்பு நிறுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.