ஆட்டோ சாரதியை செருப்பால் அடித்த அழகி-வெளியான காரணம்..!


இந்தியாவின் கர்நாடக தலைநகர் பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது முச்சக்கரவண்டி உரசியதால் இளம்பெண் ஆத்திரமடைந்தார். 

முச்சக்கரவண்டி சாரதியை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட இளம்பெண், அவரை செருப்பால் தாக்கியுள்ளார். 

மேலும் இந்தி மொழியில் அந்த முச்சக்கரவண்டி சாரதியை இளம்பெண் திட்டியதாக கூறப்படுகிறது. இதை முச்சக்கரவண்டி சாரதி தனது கையடக்க தொலைபேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். 

பெங்களூருவில் கன்னடர்களை வெளிமாநிலந்தவர் அண்மை காலமாக கீழ்த்தரமாக நடத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே முச்சக்கரவண்டி சாரதி கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைவாக பெல்லந்தூர் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகிறது.

 

 


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post