யாழில் திடீரென குறுக்கால் வந்த மாடு-சடனா போட்ட பிரகே்-பற்றி எரிந்த மோட்டார் சைக்கில்-பதறி ஓடிய நபர்..!{படங்கள்}

 யாழ்.தென்மராட்சி மந்துவில் பகுதியில் நடு வீதியில் மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த சம்பவம் வரணி வேம்பிராய் வீதியில் மந்துவில் மருதடி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது...

குடும்பஸ்தர் ஒருவர் வரணிப்பகுதில் ஆலயம் ஒன்றிற்கு சென்று விட்டு வரணி வேம்பிராய் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மந்துவில் பகுதியில் வீதிக்கு குறுக்காக மாடு ஒன்று சென்றதாகவும் இதனால் மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாவதைத் தவிர்க்கும் நோக்குடன்
 மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குடும்பஸ்தர் தடுப்பை பிரயோகித்து மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறித்த குடும்பஸ்தர் அணிந்திருந்த உடைகளிலும் தீ பற்றியதால் அவர் சிறிய எரி காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து முற்றமாகச் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது




.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post