திடிரென விடுதியில் அலறிய மாணவி-காவலாளி செய்த கொடூரம்..!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட காவலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியம் ஜட்ஜ் காலனி பகுதியில் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 128 மாணவிகள் தங்கி கல்லூரிகள், பாடசாலைகளில் பயின்று வருகின்றனர். 


இந்தநிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சானிடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பாடசாலையில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறுமி சேவை இல்லத்தில் அதிகாலையில் தூங்கி கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் சிறுமியின் முகத்தில் துணியை மூடி தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளார். 

அப்போது மாணவி அவரிடம் இருந்து தப்பி ஓட முயச்சித்தபோது அந்த நபர் மாணவியை கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டு இரும்பு ராடால் காலில் தாக்கியபோது கால் முறிவு ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சிறுமி கூச்சலிட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். 

இதையடுத்து சேவை இல்லத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். 

அங்கு சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிட்லபாக்கம் பொலிஸார் மகளிர் விடுதிக்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கெமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர், 

மேலும் அரசு சேவை இல்லத்தில் சுற்றுச்சுவர் அதிக உயரம் கொண்டவை இதனால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாத நிலையில் முகப்பு பகுதியில் காவலாளி போடப்பட்டு இருப்பதால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்ல வாய்ப்பு இல்லாததால் பொலிஸார் அரசு சேவை இல்லத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த மேத்யூ (50) என்பவரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர். 

விசாரணையில் காவலாளி தான் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிட்லபாக்கம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலைய பொலிஸார் காவலாளியை விசாரணை நடத்தினர். விசாரணையில் சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மேத்யூ(50) என்பது தெரியவந்துள்ளது. மேலும் மேத்யூவின் தாயார் அதே அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து உள்ளார். அவர் இறந்த பிறகு கருணை அடிப்படையில் இவருக்கு அங்கு பணி வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 

மேலும் கடந்த 14 வருடங்களாக அங்கு காவலாளியாக மேத்யூ பணிபுரிந்து வருவதும், மேலும் பாதிப்புக்கு உள்ளான மாணவி ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் அரசு சேவை இல்லத்தில் சேர்ந்ததால் இவர் வெளியில் எதையும் சொல்லமாட்டார் என்று எண்ணி அவரிடம் பாலியல் தொந்தராவில் காவலாளி ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து மேத்யூ மீது சிட்லபாக்கம் அனைத்து மகளிர் பொலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸ் நிலையத்திலிருந்து குரோம்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது செய்தியாளர்கள் வீடியோவாக பதிவு செய்யவும்போது வீடியோ எல்லாம் எடுக்கக்கூடாது என கூறி மேத்தியூவின் மகன் செய்தியாளரை தாக்கினர். 

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் குரோம்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை முடிக்கப்பட்டு நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இதே போன்று வேறு எந்த மாணவியிடமாவது இவர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அரசு சேவை இல்லத்தில் தங்கி உள்ள மற்ற மாணவிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post