நிலாவெளி பகுதியில் இன்று (18) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஓட்டோவில் பயணித்த திரியாயைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் மாணிக்கம் நடராசா உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
திரியாய் காணி மீட்புப் போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்தி பல செயற்பாடுகளில் இவர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
