மோட்டர்சைக்கிள் விபத்தில் சிக்கிய வெளிநாட்டுப் பெண் காயம் - பதுளையில் சம்பவம்
ஸ்கூட்டர் ரக உந்துருளி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்த ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் மாலை 4.00 மணியளவில் குறித்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் எல்ல கொடுவல சந்திக்கு அருகில் ஸ்கூட்டர் ரக உந்துருளியில் பயணிக்கும் பொழுது வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி பதுளை வைத்தியசாலையில் வாட்டு இலக்கம் 10 இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.