சக்தி வாய்ந்த பிரதோஷம்-இன்றைய ராசிபலன்.{22.7.2025}

 

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
இன்று உங்களுக்கு சுமாரான நாள். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும் நாள்.
ரிஷபம்
taurus-rishibum
தனவரவு தாராளமாக இருக்கும் நாள். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும்.
மிதுனம்
gemini-mithunum
தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள், பணமுடையும் தவிர்க்க முடியாதது. உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும்.
கன்னி
virgo-kanni
புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புது தெம்பு ஏற்படும். உல்லாசப் பயணங்கள் உற்சாகம் தரும். கருத்தரிப்பு அல்லது பிள்ளைப் பிறப்பு ஏற்படலாம்.
மகரம்
capricorn-magaram
வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும் எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது.
கடகம்
cancer-kadagam
தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியவர்கள் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும். பெண்களால் நன்மை உண்டாகும்.
சிம்மம்
leo-simmam
புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, பணப்பயன் உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். புகழ் ஓங்கும்.
துலாம்
libra-thulam
எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், மற்றவர்கள் பகை ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் அன்பாகப் பழகவும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் ஆதாயம் பெறலாம்.
மீனம்
pisces-meenam
மனதில் தைரியமும், புதிய தகவல்கள் மூலம் புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும்.
தனுசு
sagittarius-thanusu
தன வரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பணவரவால் மனம் பரவசப்படும். ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். துணிந்து செயல்பட்டு தோல்வியைத் தவிருங்கள். வெற்றி உங்கள் பக்கம்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post