சீதுவ – ராஜபக்சபுர பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதுவ நகர சபையில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நகர சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையைக் குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 55 வயது நபர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.