சக்தி வாய்ந்த ஆடி அமாவாசை-இன்றைய ராசிபலன்..!{24.7 2025}

 

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். புத்தி தெளிவு பெற்று ஆதாயம் தரும் புதுப்புது சிந்தனைகள் தோன்றும். பிற்பகலில் பொருட்களை பத்திரப்படுத்தி வைத்தால் இழப்புகளைத் தவிர்க்கலாம்.
ரிஷபம்
taurus-rishibum
வம்பு, வழக்கு மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். புதிய உற்சாகம் பிறக்கும். மனைவியின் உதவி மனதை லேசாக்கும். வீட்டின் கதவை வெற்றிகள் தட்டும்.
மிதுனம்
gemini-mithunum
மனத் திருப்தி மற்றும் தனவரவு தரும் மகிழ்வான நாள். வாக்கு வன்மையால் பயன்பெறும் வளமான நாள். செலவுகள் அதிகரிக்கும். மனச்சோர்வும், உடல் சோர்வு ஏற்படலாம்.
கன்னி
virgo-kanni
புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு. விருந்தோம்பலால் மனம் மகிழும்.
மகரம்
capricorn-magaram
எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும். தொழிலில் தனவரவு ஏற்படும். வாகன, போஜன சுகங்கள் கிடைக்கும். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள்.
கடகம்
cancer-kadagam
புத்தி தெளிவின்மையால் நிம்மதியற்ற நிலை தென்பட்டாலும், பின்னர் புது தெம்பும், புத்தொளியும் ஏற்படும். ஆராய்ச்சி மனப்பான்மையால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத பணவரவு உண்டு.
சிம்மம்
leo-simmam
பலவகையிலும் பணவரவு ஏற்படும். பிறருக்கு உதவுவதால் மனம் பேரின்பம் அடையும். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிற்பகலில் கோபத்தால் வம்பு தும்பு விலைக்கு வாங்க திருப்பது விவேகம்.
துலாம்
libra-thulam
மனதில் அமைதியும், தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபாடு நிலவும். சுகம், சந்தோஷம் மற்றும் உல்லாசப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். அரசு ஆதரவு உண்டு. பணி உயர்வு, பணவரவு எல்லாம் உண்டு.
மீனம்
pisces-meenam
வீண் செலவுகள் ஏற்படலாம். பிற்பகலில் பயணங்களில் தடங்கல்கள் ஏற்படும். தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். இந்த நாள் இனிய நாளாக இறைவனை இறைஞ்சுவதைத் தவிர வழியேதும் இல்லை.
தனுசு
sagittarius-thanusu
மனைவி மூலம் நன்மையும், மகிழ்வும் பெருகும் நாள். நேர்மையுடன் செயல்படுங்கள். பிறரிடம் பணிவுடன் இருந்தால், பெறும் பயன்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலங்கள் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. வாழ்க்கையில் புது திருப்பங்கள் ஏற்படும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும்.
கும்பம்
aquarius-kumbam
எங்கே நிம்மதி ? என மதியம் வரை இன்னல் இருந்தாலும், பின்னர் தனம், சுகம் தந்து ஏற்றம் மிகும் இனிய நாள். புதிய தோழிகள் தோழமை கிடைக்கும். வெற்றிகரமான நாள்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post