வியாழக்கிழமை, 31 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்கள் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.
ரிஷபம்
taurus-rishibum
எதிலும் ஆராய்ந்து வேலையில் இறங்க வேண்டிய நாள். சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும்.
மிதுனம்
gemini-mithunum
அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும் என முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.
கன்னி
virgo-kanni
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் ஆகியவற்றை அணிவார், சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும்.தொழில் வளம் பெருகும்.
மகரம்
capricorn-magaram
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் போன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள்.
கடகம்
cancer-kadagam
அன்பு சகோதரர்களால் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
சிம்மம்
leo-simmam
கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
துலாம்
libra-thulam
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. எடுத்த காரியங்களில் ஆதாயம் பெற எச்சரிக்கையுடன் நடத்தல் அவசியம். தீய வழிகளில் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டியது வரும். சிலருக்கு இடமாற்றம், பணமுடையும் ஏற்படலாம்.
மீனம்
pisces-meenam
பண வரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். காதல் வசப்பட்டு களிப்பு எய்துவர். புதிய தொழில் முயற்சிகள் ஈடேறும்.
தனுசு
sagittarius-thanusu
தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் ஓங்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பெண்களால் தன லாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வார்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவது உறுதி. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிட்டும்.
கும்பம்
aquarius-kumbam
வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து. செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். எந்தச் செயலையும் அவசரமின்றி நிதானமாகச் செய்தால் வெற்றி நிச்சயம்.