மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் சளி அடைத்து 5 மாத சிசு ஒன்று உயிரிழந்து உள்ளது.
நேற்று மாலை சிசு சளி அடைப்பு காரணமாக பெற்றோர் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி சுமார் ஆறு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது சிசு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சிசுவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புரவுன்சீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவிற்கு செல்லும் வீதி சுமார் இரண்டு கிலோ மீற்றர் மிகவும் பாரிய குன்றும் குழியுமாக உள்ள நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள், நோயாளிகள், பாடசாலை மாணவர்கள் பாரிய இன்னலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது எனவும் இந்த இரண்டு கிலோ மீட்டர் வீதியை தோட்ட நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செப்பனிட்டு தருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.