யாழில் 55 வயது ஐயர் ரயில் மோதி பலி..!

 யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள புகையிரதக் கடவையில் புகையிரதம் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார். புகையிரதம் வரும்போது புகையிரதக் கடவை மூடப்பட்டிருந்தபோதும் அதனைக் கடப்பதற்கு முயற்சித்தவேளை புகையிரதம் அவரது துவிச்சக்கர வண்டியின் பின்பக்கத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி  (15) மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post