அனைத்து ஆசிரியர்களுக்கும் இனி இது கட்டாயம்-வெளியான முக்கிய அறிவிப்பு..!

 

ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் அவசியமாக்கப்படும்

ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப் பத்திரம் கட்டாயமாக்கப்படும். இந்த இலக்கை நோக்கி நாம் நகர வேண்டும். அரச பாடசாலையில் அல்லது சர்வதேசப் பாடசாலையில் அல்லது டியுசனில் அல்லது வேறு கற்பித்தல் பணியில் ஈடுபடுவதற்கு கட்டாயமாக அனுமதிப் பத்திரம் பெறல் வேண்டும். உருவாக்கப்படவுள்ள ஆசிரியர் சபை இதனை வழங்கும். நிர்வகிக்கும்.

மகிந்த ஜயசிங்க பிரதி அமைச்சர்

புதிய கல்விச் சீர்திருத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு கற்றல் அனுமதிப் பத்திரம் அறிமுகம்

-பிரதி அமைச்சர் 

தற்போது பின்வரும் தொழில் ஈடுபட தங்களைப் பதிவு செய்து அனுமதிப் பத்திரம் பெற்றிருக்க வேண்டும்.

*மருத்துவர்கள்             -GMO

*பொறியியலாளர்கள் -IESL

*சட்டத்தரணிகள்.         - BAR council 

இதேபோல் புதிய கல்வி சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தும் போது, ஆசிரியர் சபை மூலம் ஆசிரியர்களுக்கு கற்றல் அனுமதிப் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளதாக பிரதி அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார் என முகநூல் பக்கத்தில் செய்தி உலாவி வருகிறது.இதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டால், ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலின் விளைதிறன் எதிர்பார்த்த மட்டத்தை விட உயர்ந்த மட்டத்தில் காணப்பட வேண்டும்.

ஆசிரியர்களின் செயலாற்றுகை எதிர்பார்த்த மட்டத்தை விட குறைவாக இருப்பின், கற்பித்தல் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க முடியாமல் போகும்.

இதைவிட ஆசிரியர் ஒழுக்கக் கோவையின் விதிகளை கடைப்பிடிக்கத் தவறும் ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க முடியாமல் போகும்.



قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post