தூரியன் விதை தொண்டையில் சிக்கியதால் மரணம்
குடும்பஸ்தர் ஒருவர் தொண்டையில் தூரியன் விதை சிக்கி உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் எஹெலியகொட - பரகடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 86 வயதுடைய ஆரியதாச வீரசிங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital - Ratnapura) மரண விசாரணை அதிகாரி ஹரிந்திர லக்மினா தென்னகோனால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சாட்சியமளித்த உயிரிழந்தவரின் மனைவி, தனது கணவரின் தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதாக தெரிவித்திருந்தார்.
எனினும் பிரேத பரிசோதனையில் தூரியன் விதை தொண்டையில் சிக்கியதால் மரணம் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.