இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு இன்று (14) வழங்கி வைக்கப்பட்டது.
ஊக்குவிப்பு கொடுப்பனவு முத்திரைகள் வழங்கும் நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலகத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். முகமது கனி தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது வெளிநாடு சென்றுள்ள பெண்களின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பாதுகாவலர்கள் மற்றும் கணவன்மார்களுக்கு 5000 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகள் (10,000 ரூபா) வழங்கப்பட்டது.