இன்றைய தினம் (07.07.2025) மாலை 5மணியளவில் கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் டிப்பருடன் கயஸ் மோதி பாரியளவான விபத்து ஒன்று பதிவாகியுள்ளது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற டிப்பருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கயஸ் நேருக்கு நேர் மோதி பாரியளவான விபத்து ஏற்பட்ட நிலையில் கயஸில் பயணித்த பயணிகள் எந்த வித உயிர்ச் சேதங்களும் இன்றி பலத்த காயங்களுடன் தப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பலத்த காயம் அடைந்த பயணிகள் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்