சேலம் மாவட்டம், பொச்சம்பள்ளி அருகே வீர கவுண்டனூரைச் சேர்ந்த பழனிவேல் (38) மற்றும் வாலிப்பட்டியைச் சேர்ந்த சங்கீதா (36) ஆகியோர் கல்லூரி காலத்தில் காதலித்து, 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சங்கீதா, 2012இல் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார், அதேவேளை பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பழனிவேல், குறைந்த ஊதியத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பொறாமை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், சங்கீதா, பழனிவேலை பிரிந்து, தனது தாயார் சுகமாணிக்கம் வீட்டில் தங்கினார்.
இதனிடையே, சங்கீதாவுக்கும், உள்ளூர் சிக்கன் கடை உரிமையாளர் தினேஷுக்கும் (33) இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்தப் பிரிவினையைத் தொடர்ந்து, சங்கீதா, பழனிவேலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால், பழனிவேல், சங்கீதாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தார். சமீபத்தில், ஒரு இரவு, சங்கீதாவின் தாய் வீட்டிற்கு தினேஷ் வந்ததை அறிந்த பழனிவேல், மரத்தில் ஏறி ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்து, தினேஷ் மற்றும் சங்கீதா தனிமையில் இருப்பதை உறுதி செய்தார்.
அவர்களை “கையும் களவுமாக” பிடிக்க, வீட்டின் மெயின் கேட்டை பூட்டி, பொச்சம்பள்ளி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மேலும், தினேஷின் மனைவியையும் அழைத்து, சம்பவத்தை அம்பலப்படுத்தினார்.
காவல்துறையினர் வந்தபோது, சங்கீதா, “நான் விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டேன், இதற்கு மேல் ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள்?” என கூறி, வெளியே வர மறுத்தார்.
பின்னர், காவல்துறையினர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவரை வெளியே வரவழைத்தனர். அப்போதும், தினேஷை அறையில் பூட்டி வைத்துவிட்டு, தனியாக வெளியே வந்தார்.
இதனிடையே, சங்கீதா, “நீதான் காரணம் என எழுதி, தற்கொலை செய்து கொள்வேன்” என பிளாக்மெயில் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
பழனிவேல், தினேஷ், சங்கீதாவை வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் மிரட்டியதாகவும், இதனால் அவர் தினேஷ் சொல்படி நடப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
சம்பவத்தின்போது, சங்கீதாவின் உறவினர்கள் திரண்டு, பழனிவேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர், அனைவரையும் சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம், உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்க, இந்த சம்பவம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.