காரைநகரிலும் விபத்து-சிகிச்சை பலனின்றி இளைஞன் பலி..!

 காரைநகர் பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் நேற்றைய உயிரிழந்துள்ளார்.

இதன்போது காரைநகர் – களபூமி பகுதியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது – 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் பயணித்த உந்துருளியும் உழவு இயந்திரம் (லான்ட்மாஸ்டர்) ஒன்றும் கடந்த 1ஆம் திகதி இரவு காரைநகர் பாலத்தடியில் மோதி விபத்து சம்பவித்தது.

இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post