முதியோர் இல்லத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட முதியவர்கள்
இந்தியாவில் கேரளாவில் ஒரு முதியோர் இல்லத்தில் திருமணம் நடந்துள்ளது.
விஜயராகவன் (79) மற்றும் சுலோச்சனா (75) என்ற இருவரும் வயதான தம்பதியினர்.
இவர்கள் முதியோர் இல்லத்தில்தான் முதன் முதலாக சந்தித்துள்ளனர்.
இருவரும் பார்த்தவுடனேயே பேசிக்கொண்டு நட்பாக பழகி வந்துள்ளனர்.
நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
தொடர்ந்து, முதியோர் இல்ல நிர்வாகத்தின் ஆதரவுடன், எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்த திருமண விழாவில் நண்பர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ள மற்ற அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இது குறித்து விஜயராகவன் கூறுகையில் இந்த வயதில் எங்களுக்கு இப்படியொரு பந்தம் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
இந்த திருமண விழாவில் கேரளா உயர் கல்வி அமைச்சர் ஆர். பிந்து, நகர மேயர் எம்.கே. வர்ஜீஸ், மற்றும் பிற அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.