இந்தியாவின் அஹமதாபாத் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் குழுவினர் விமான விபத்து தொடர்பாக முதற்கட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த மாதம் அஹமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே வீழ்ந்து நொறுங்கியது.
விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.
விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேரும் உயிரிழந்தனர். இதற்கமைய மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முதற்கட்ட அறிக்கை தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.