கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி..?

 

பீகார்_மாநிலம் கயா அடுத்த கிஜ்ரா சராய் நகரில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு விபரீதமாக முடிந்துள்ளது. அடிக்கடி சண்டையிட்டு வந்த இந்தத் தம்பதியினர் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது கணவன் தனது மனைவியை சரமாரியாகத் தாக்க, ஆத்திரமடைந்த மனைவி திடீரென ஆவேசமடைந்தார். கணவனை அடித்துக் கீழே தள்ளி, அவரது உடல் மீது உட்கார்ந்துகொண்டு நாக்கைக் கடித்து மென்று விழுங்கியுள்ளார்.

நாக்கு துண்டானதால் கணவர் வலியால் அலறித் துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மனைவி கணவன் மீது உட்கார்ந்திருப்பதையும், அவரது வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறிக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இருவரையும் சமாதானம் செய்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த கணவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் அவர் ஆபத்தான நிலைக்குச் சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post