ஆற்றுக்குள் பாய்ந்த ஆட்டோ-பயணித்த இருவரின் கதி..?

வாசனைத் திரவியங்கள் மற்றும் சவர்க்காரப் பொருட்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி தடம் புரண்டுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டி கொட்டகலை ஹட்டன் பிரதான வீதியில் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

அந்த முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸ்காரர் மேற்கொண்டு வருகின்றனர்.