ஹேவாஹேட்ட நகரில் இருந்து மூக்குலோயா தோட்டத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (2) பகல் இடம்பெற்றுள்ளது.
ஹேவாஹேட்ட நகரில் வாடகைக்கு மக்களை ஏற்றிகொண்டு சென்ற முச்சக்கரவண்டி ரூக்வூட் தோட்ட பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் உள்ள மின் இணைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு தீ பற்றி எரிந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரிக்கிலகஸ்கட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.