முன்பதிவு செய்து விற்கபடும் குழந்தைகள்

 

சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டு 25 குழந்தைகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட கடத்தல் கும்பலை இந்தோனேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில், சில குழுந்தைகளுக்கு கருவிலேயே தத்தெடுக்கப்பட்டு குழந்தை பிறப்பிற்கான செலவுகள் தீர்த்த பின்னர் விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்களும் வெளிவந்துள்ளன.

இந்தோனேசியாவின் இரண்டு நகரங்களில் 13 பேரை பொலிஸார் கைது செய்து, கடத்தப்படவிருந்த சுமார் ஒரு வயதுடைய ஆறு குழந்தைகளை மீட்டுள்ளனர்.

இந்த கும்பல் குழந்தைகளை வைத்திருக்க விரும்பாத பெற்றோர்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்களை குறிவைத்து, பெரும்பாலும் வட்ஸ்அப்பில் குறுஞ் செய்திகளை அனுப்பி பேஸ்புக்கில் தொடர்பை ஆரம்பிப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் அவர்களின் தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்டு, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வளர்ப்பு பெற்றோரிடம் கொடுக்கப்பட்டு, பின்னர் ஜகார்த்தாவிற்கு கொண்டு வரப்பட்டு பிறப்புச் சான்றிதழ்கள், கடவுசீட்டுக்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மேலும் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதே தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post