மாத்தறை, வல்கம பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் ஒன்றில், அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் மூன்று உதவி பொலிஸ் பரிசோதகர்களின் பணி தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மசாஜ் நிலையத்தில், மாவரல, திஹகொட மற்றும் மாத்தறை காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த மூன்று உதவி பொலிஸ் பரிசோதகர்கள், நேற்று (16) சென்று அநாகரிகமான முறையில் பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி மசாஜ் சேவைகளை பெற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாத்தறை உதவி காவல் மாஅதிபர் (1) விசாரணை நடத்திய பின்னர், இந்த மூன்று உதவி காவல் பரிசோதகர்களின் பணி தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.