ஹரியானாவின் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையாவார். 25 வயதான இவர், பல மாநில மற்றும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றவர்.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பில் (ITF) இரட்டையர் பிரிவில் 113-வது இடத்தைப் பிடித்திருந்தார்.
ராதிகா இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு அடிமையாக இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அவரது தந்தை தீபக் யாதவ் பலமுறை கண்டித்த போதிலும், ராதிகா இதிலிருந்து மீளவில்லை.
இதனால் கோபமடைந்த அவர், தனது மகள் என்று பாராமல், உரிமம் பெற்ற 32 போர் துப்பாக்கியால் ஐந்து முறை சுட்டதில், மூன்று குண்டுகள் பாய்ந்து ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தீபக் யாதவ் பயன்படுத்திய துப்பாக்கியைப் பறிமுதல் செய்ததுடன், அவரைக் கைது செய்துள்ளனர்.
தற்போது செக்டர் 56 பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கொலையின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.