நேற்று(29) மாலை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தவேளை பின்னால் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அவரை கீழே தள்ளி விழுத்திவிட்டு வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஊரெழு பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.