திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் சந்தைக்கு பின்புறமாகவுள்ள வாய்க்காலினுள் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூதூர் பாலநகரைச் சேர்ந்த 43 வயதுடையரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் இன்று புதன்கிழமை (30) அதிகாலை 2.00 மணியளவில் மீன்பிடிக்கச் சென்றதாக தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த நபர் உயிரிழந்ததிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

