கிளிநொச்சிபௌதீகவியல் ஆசிரியர் நவா சேரின் அண்ணாவின் மகன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (20-07-2025) அறநெறி பாடசாலை நடைபெற்ற பொழுது கொழும்பு இந்துக்கல்லூரி மாணவனுக்கு புற்றுநோய் (Cancer) என்று அந்த மாணவனின் வகுப்பில் கல்விகற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று எல்லாரும் பாடசாலைக்கு வந்து பிள்ளையாருக்கு விஷேட பூசை செய்தார்கள், அந்த நிகழ்வு முடிந்த பின்னர் பிரசாதம் எல்லாம் வழங்கி சென்றார்கள், அறநெறி பாடசாலை பிள்ளைகளும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். ஆனால் அந்த மாணவன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார் .
கொழும்பு இந்துக்கல்லூரி பாடசாலையில் தரம் 4E இல் கல்விகற்கும் மாணவனாகிய செல்வன் ந.சஸ்மிதன் அவர்கள் 21/07/2025 அன்று காலமானார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
செல்வன். ந.சஸ்மிதன் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் 🙏