தகாத உறவால் வந்த வினை..

 

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய தேயிலை தோட்டத்தில் பாலடைந்த விடுதியில் பெண் ஒருவர் கழுத்தில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது,சம்பவத்தில் 39 வயதான பெண் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புசல்லாவ நோனா தோட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணுக்கும் சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபருக்கும் இடையில் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்துள்ளதாகவும் ,இன்று இருவரும் குறித்த நாவலப்பிட்டியில் பாழடைந்த வீட்டில் சந்தித்த போதே குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post