வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
பணவரவால் மனம் பரவசப்படும் நாள். ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.
மிதுனம்
gemini-mithunum
பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படடும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது. கல்வியில் வெற்றிகள் குவிப்பார்கள்.
கன்னி
virgo-kanni
இன்று உங்களுக்கு சுமாரான நாள். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும் நாள்.
மகரம்
capricorn-magaram
புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, பணப்பயன் உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கடகம்
cancer-kadagam
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். வாகன சுகம் குறையும்.
சிம்மம்
leo-simmam
மனதில் தைரியமும், புதிய தகவல்கள் மூலம் புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும்.
துலாம்
libra-thulam
தனவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு அருமையான நாள்.
மீனம்
pisces-meenam
எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். மனைவியின் கலகத்தால், மற்றவர்கள் பகை ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் அன்பாகப் பழகவும்.
தனுசு
sagittarius-thanusu
தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியவர்கள் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும். பெண்களால் நன்மை உண்டாகும். ஸ்த்ரீ போக விருத்தி உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள், பணமுடையும் தவிர்க்க முடியாதது. உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர் வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும்.
கும்பம்
aquarius-kumbam
இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் மாறி வரும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் தேகத்தில் புது தெம்பு ஏற்படும். உல்லாசப் பயணங்கள் உற்சாகம் தரும்.