பாடசாலை நேரத்தில் மாற்றம் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் பாடவேளைக்கான நேரம் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்களாக அதிகரிக்கப்படுகிறது.
இதன்படி, ஒரு நாளைக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆகக் குறைவடைவதோடு, பாடசாலை முடிவடையும் நேரம் அதிகரிக்கப்படுகிறது.
இந்த நேர மாற்றத்தை 2026 ஆம் ஆண்டு முதல் தரம் 1 மற்றும் 6க்கு மாத்திரமின்றி அனைத்து வகுப்புக்களிலும் அமுல்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.