யாழில் இளைஞன் உயிரிழப்பு

 

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞன் ஒருவர் நேற்றுமுன்தினம் (19) உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த செ.பிரசாந்தன் (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் (19) மயக்கமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார்.

நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post