கொழும்பு - கண்டி வீதியில் உள்ள தித்வெல் மங்கட பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், ஒரு டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் பிக்கு ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கோவிட பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து, கண்டி நோக்கிச் சென்ற டிப்பர் லொறியுடனேயே மோதியுள்ளது. இதன்போது பேருந்து வீதியை விட்டு விலகி கடையொன்றுக்கு அருகே நின்றுள்ளது.
பேருந்தானது பாதை ஒழுங்கை பின்பற்றாமல் தவறான முறையில் பயணித்து, எதிர்திசையில் வந்த டிப்பர் லொறியுடன் மோதியதாக தங்கோவிட்ட பொலிஸார் குறிப்பிட்டனர்.