இராவணனால் 25 இடங்களில் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 19 விமானங்களை மீட்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஆராய்ச்சி பிரிவு தயாராகுகிறது
இராவணனால் 25 இடங்களில் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 19 விமானங்களை மீட்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஆராய்ச்சி பிரிவு தயாராகுகிறது.
இந்த விமானங்கள் ராவணனால் தயாரிக்கப்பட்டதாகவும், பாதரசம் மற்றும் வேறு இரசாயனங்களைப் பயன்படுத்தி பறந்ததாகவும் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
குருநாகல், வாரியப்பொல, சிகிரியா, தம்புள்ள, மஹியங்கன்னை, பதுளை, அம்பாந்தோட்டை உள்ளடங்கலாக குகைகளிலும் மலைப்பாங்கான பகுதிகளில் நிலக்கீழும் விமானங்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிப்புகள் குறிப்பிடுகின்றன.
இது தவிர ராவணனின் விமானத்தை இயக்குவதற்கான நபரொருவரும் காணப்பட்டதாக ஆராய்ச்சிகள் வெளிக்காட்டியுள்ளன
இராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை அதிகார சபை” ஒரு விளம்பரத்தை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது.
“இராவண மன்னன் மற்றும் விமான ஆதிபத்தியத்தில் நாம் இழந்த மரபு” என்கிற தலைப்பில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கான மூலத் தகவல்களை தேடும் முயற்சிக்கு உதவுமாறும் அந்த விளம்பரத்தில் கோரப்பட்டுள்ளது. இவற்றுக்கு தேவைப்படுகின்ற இராவணன் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள் ஆதாரங்கள் என்பவற்றை கோரியுள்ளது “சிவில் விமான சேவை அதிகார சபை.
