2026 வருடம் தொடக்கம் GCE O/L , A/L மற்றும் GIT பொதுப் பரீட்சைகளுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயம் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துதல். க.பொ.த (சாதாரண தரம்) க.பொ.த உயர் தரம்) மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பம் (GIT) ஆகிய பரீட்சைகளுக்கு தேசிய அடையாள அட்டை (NTC) இன்றி வேறு முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிப்பதனால் பரீட்சார்த்திகளும் இலங்கை பரீட்சைத் திணைக்களமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 02. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2025–2026) இற்கான விண்ணப்பங்களை பாடசாலையால் சமர்ப்பிப்பதற்கு முன்னர் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அதற்கான அறிவுறுத்தல்களையும் ஒத்துழைப்பையும் மாணவர்களுக்கு வழங்குமாறு அறியத்தருகிறேன். 03. 2026 ஆம் ஆண்டு முதல் பொத சாதரண தரம்), க.பொ.த (உயர் தரம்) மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளமையால். இது தொடர்பாக மாணவர்களுக்குத் அறிவுறுத்தி, தேசிய அடையாள அட்டைகளைத் பெற்றுக்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். 04 தேசிய அடையாள அட்டைகளை விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படை ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறியத்தருகிறேன். இது தொடர்பாக தாங்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு மதிப்பளிக்கிறேன். ஏ.கே. இந்திகா குமாரி லியனகே பரீட்சை ஆணையாளர் நாயகம்
