திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியைச் சேர்ந்த இரண்டு வயதுடைய சிறுவன் கறிக்குழம்பில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில், சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் ஆடி மாதம் குலதெய்வ வழிபாட்டுக்காக சென்றார். விழாவுக்கு வந்த பக்தர்களுக்காக கோவில் அருகே உணவு தயாரிக்கப்பட்டது.
அங்கு சிவக்குமாரின் 2 வயது மகன் ஸ்ரீதரன் விளையாடிக் கொண்டு இருந்தான். கறிக்குழம்பு தயார் செய்து அதனை பாத்திரத்தில் வைத்து விட்டு அங்கிருந்தவர்கள் மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் ஸ்ரீதரன் எதிர்பாராதவிதமாக அந்தப் பாத்திரத்தில் தவறி விழுந்தான். இதில் அவன் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் சிறுவனை வத்தலக்குண்டு அரச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் குலதெய்வ வழிபாட்டுக்கு வந்தவர்கள் மத்தியில் மிகுந்த சோகம் நிலவியது.
