தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த தடையை மீறும் ஆசிரியர்கள், பாடசாலைகள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர எச்சரித்துள்ளார்.இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்தப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.