பிரித்தானியாவுக்கு வந்து இரண்டு மாதங்களில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழப்பு ! யாழ் எழுதுமட்டுவால் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீர் வேலி பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார் இந் நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு கோடி 50 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவு செய்து முகவர் ஊடாக பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார் திரும்பி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலை என தனக்கு நெருக்கமானவர்களுக்கு கூறி வந்ததாக கூறப்படுகின்றது நேற்று செவ்வாய்க்கிழமை வசித்து வரும் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் எழுமட்டுவால் பகுதியைச் சேர்ந்த கைலைநாதன் நிரோஜன் வயது 37 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
