மாமியாருக்கு நேர்ந்த சோகம்

 

மகளுக்கு நகை, பணம் கொடுத்ததில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை, மருமகளே கழுத்து நெரித்து தலைமுடியை பிடித்து தரையில் இடித்து கொன்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அண்ணா நகரை சேர்ந்தவர் அய்யம்மாள்(79). இவருக்கு  2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

மகளுக்கு நகை கொடுத்த மாமியார் ; நள்ளிரவில் மருமகள் அரங்கேற்றிய பெரும் கொடூரம் | Daughter In Law Killed Mother In Law

அரச பஸ் சாரதியாக பணிபுரியும் மகன் பழனிவேல் தனது அக்கா  மகள் தேவி (39)யை, திருமணம் செய்துள்ளார்.

அய்யம்மாள், மகனுடன் வசித்து வந்த நிலையில், தன்னிடம் உள்ள நகை மற்றும் பணத்தை அடிக்கடி மகளுக்கு மட்டும் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக மருமகளுக்கும் , மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அய்யம்மாள் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மகளுக்கு பணம் கொடுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 ஆத்திரம் அடங்காத மருமகள் நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த அய்யம்மாளின் கழுத்தை நெரித்தும், தலைமுடியை பிடித்து தரையில் இடித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பின்னர் நேற்று அதிகாலை மருமகள் வேட்டவலம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று, நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் மேலும் மருமகளையும்  கைது செய்துள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post