மாணவன் உட்பட இருவர் சேர்ந்நது செய்த விளையாட்டு-தட்டி தூக்கிய பொலிசார்..!

 

பசறையில் கடை உடைத்துத் திருட்டு பாடசாலை மாணவர் உட்பட இருவர் கைது

பசறை, ஆக்கரத்தன்ன பகுதியில் உள்ள ஒரு கடையில் கடந்த 15 ஆம் தேதி இரவு கடையை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டு, 112,640 ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர் ஒருவரும் மற்றொரு சந்தேக நபரும் நேற்று மாலை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை  பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை, யூரி தோட்டம் ஆக்கரத்தன்ன பிரிவில் வசிக்கும் 18 வயது மற்றும் 14 வயதுடைய இளைஞர்களை  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆம் தேதி இரவு நபர் ஒருவரின்  வீட்டில் நடத்தப்படும் கடையை உடைத்து அங்கு இருந்து 105,000 ரூபாய் பணம் மற்றும் 7,640 ரூபாய் மதிப்புள்ள  பொருட்கள் திருடப்பட்டதாக கடை உரிமையாளர் பசறை பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணையைத் ஆரம்பித்தனர் 

விசாரணையின் போது  இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்,

மேலும் மற்றொரு சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் மேலும் பசறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post