திருமலையில் மனைவியை துடிதுடிக்க குத்தி கொன்ற கணவன்-நீதிமன்று அதிரடி தீர்ப்பு..?

 

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் இன்று (05) திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டி தீர்ப்பளித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கந்தளாய் பகுதியில் தனது மனைவியான முஹம்மது பௌஸ் ரஷ்மியா (29வயது) என்பவரை கூறிய கத்தி கொண்ட ஆயுதத்தினால் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த கணவரான கந்தளாய்-பேராறு பகுதியில் வசித்து வரும் மங்கு என்று அழைக்கப்படும் சுபியான் இன்சான் (38வயது) என்பவர் குறித்த கொலையை செய்தார் என எதிரிகள் சார்பில் வழங்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கினை அரச சட்டத்தரணி டி தர்ஷிகா நெறிப்படுத்தியதுடன் 296 ம் இலக்க குற்றச்சாட்டின் கீழ் கொலை குற்றச்சாட்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு இன்றைய தினம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நீதிபதியாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் கடைமையாற்றும் சந்தர்ப்பத்தில் வழங்கிய முதல் தீர்ப்பு எனவும் குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post