யாழில் தகாத உறவில் தாய்-தட்டி கேட்க சென்ற மகளுக்கு நேர்ந்த கதி..!
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசசெயலகத்தில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பப் பெண் ஒருவர் தனது மகளை அங்கு கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு முன் நையப்புடைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குடும்பப் பெண் தனது கணவனைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
அவ்வாறு வாழ்ந்து வந்த போதும் கணவரையும் தனது பிள்ளைகளையும் வெறுப்பேற்றும் வகையில் கணவனின் தொலைபேசிக்கு வட்சப் மூலம் படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.
இதனால் கடுப்பான குறித்த குடும்பப் பெண்ணின் மகளான பாடசாலை மாணவி மருதங்கேணிப் பிரதேசசெயலகத்தில் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களிடம் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணை அங்கு வரவழைத்த உத்தியோகத்தர்கள் மகளின் முன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது அக் குடும்பப் பெண் தன்னைப் பற்றி முறையிட்டதற்காக குறித்த உத்தியோகத்தர்களுக்கு முன் தனது மகளைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
இருப்பினும் இச் சம்பவம் தொடர்பாக உத்தியோகத்தர்கள் பொலிசாரிடம் முறையிடாமல் அம் மாணவி மற்றும் குறித்த பெண்ணை அங்கிருந்த அகற்றியதாகவும் இது தொடர்பாக அப்பகுதி கிராமசேவகருக்கு மாணவியும் தந்தையும் முறையிட்ட போது குறித்த குடும்பப் பெண் தாக்கியதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பொலிசாரிடம் முறையிட முடியும் என கிராமசேவகர் கூறிய அவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் பிரதேசசெயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக
Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.
Copied code!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.