தம்பியும் அக்காவும் நேற்று காலையில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது லொறி மோதியதில் தம்பி காயமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
கம்பளை ஹொத் கால்ல பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட ரஜவெல பகுதியில் இன்று காலை ஒரு லொறி பள்ளத்தில் புரண்டு பாரிய விபத்தில் ஏற்ப்பட்டுள்ளது .
ரஜவேல பிரதேசத்தில் இருந்து ஹொத் கால்ல நகரில் உள்ள பாடசாலைக்கு பிரதான விதியில் நடந்து சென்ற , தம்பியும் அக்காவும் சென்று கொண்டு இருந்த போது தம்பி மீது லொறி மோதி பள்ளத்தில் புரண்டு பாடசாலை சிறுவன் பலத்த காயமடைந்தார்.
சம்பவ இடத்தில் எட்டு வயது சிறுவன் ஒரு லொறி மோதியதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சுய நினைவு இல்லாமல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
காயமடைந்த சிறுவனும் வாகன சாரதியும் கம்பளை ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்,
மேலதிக விசாரணை ஹொத் கால்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



