இரத்தினபுரியில் தேயிலை இலை வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவனை தேடி காவல்துறை வலைவீச்சு
இரத்தினபுரியில் (Ratnapura), தனது மனைவியின் கழுத்தை வெட்டி கணவன் கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் 52 வயதுடைய பரமசிவம் காளியம்மா எனும் மூன்று பிள்ளைகளின் தாய் ஆகும். அவர் இரத்தினபுரி, தெல்வல பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரின் கணவன் தேயிலை இலை வெட்டும் கத்தியுடன் வந்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர் தற்போது தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்ய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
