சற்று முன் ஈழத்து அகதிகள் நாடொன்றில் கலவரம்-இலங்கை புலம் பெயர் அகதி ஒருவர் துடிதுடிக்க வெட்டி கொலை..!

 சுவிட்சர்லாந்து நாட்டின் சென் காலன் மாநிலத்தில் காலை இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில், இலங்கையைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

40 வயது இத்தாலிய நபர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று( 10) காலை  இந்தச் சம்பவம், இடம்பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த வன்முறை! இலங்கையர் ஒருவர் பலி | Switzerland Gallen Attack Kills Sri Lankan

மோதல் நடப்பதாக சென் காலன் பொலிஸ் அவசர அழைப்பு மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மூன்றாம் தரப்பினரிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, சிறிது நேரத்தில் பொலிஸ் ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வெட்டுக்களுக்குள்ளாகி, படுகாயமடைந்த இரண்டு பேரைக் கண்டுள்ளனர்.

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

40 வயது இத்தாலிய நபர் பலத்த காயங்களுடன் நோயாளர்காவு மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் சென் காலன் கன்டோனில் வசிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post