சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (38), தனது மனைவியின் தகாத உறவு காரணமாக, வழக்கறிஞர் செந்தில்குமார் (35) என்பவரை ஹனி ட்ராப் மூலம் மூலம் வரவழைத்து, அறிவாளால் வெட்டி பழிவாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில்குமார், ஆந்திராவில் சட்டம் பயின்றபோது, மதுரையைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார். இந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்த செந்தில்குமார், அவரை தனது மனைவியாக்கி குடும்பம் நடத்த விரும்பினார்.

மேலும், செந்தில்குமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததாகவும், இதனால் அந்த பெண்ணை தனது கணவரை விட்டு தன்னிடம் வருமாறு வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.
இதற்கிடையில், இளங்கோவன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரது செல்போனை எதேச்சையாக பரிசோதித்தபோது, செந்தில்குமாருடனான தகாத உறவு குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
ஆத்திரத்தை கட்டுப்படுத்திய இளங்கோவன், மனைவியிடம் இதுகுறித்து விசாரிக்காமல், செந்தில்குமாரை பழிவாங்க திட்டமிட்டார். செந்தில்குமாரைப் பற்றி விசாரித்தபோது, அவர் பெண்கள் விவகாரத்தில் பலவீனமானவர் என்பது தெரியவந்தது.
இதனைப் பயன்படுத்தி, இளங்கோவன், தனக்கு பழக்கமான ஸ்ரீதேவி (32) என்ற பெண்ணை ஹனி ட்ராப் ஆயுதமாக பயன்படுத்தினார். ஸ்ரீதேவி மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீதேவி மூலம் செந்தில்குமாரை சூரமங்கலம் பகுதிக்கு வரவழைத்த இளங்கோவன், அவரை ஒரு கும்பலுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி, அறிவாளால் வெட்டி, பின்னர் கடத்திச் சென்றார்.இந்த சம்பவம் சூரமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார், இளங்கோவன், ஸ்ரீதேவி மற்றும் கும்பலில் உள்ள மற்றவர்களை கைது செய்தனர்.
செந்தில்குமாரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறையினர் ஆழமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், தகாத உறவு, பழிவாங்கல், மற்றும் குடும்ப உறவுகளில் நம்பிக்கையின்மை குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.