புதிய கடவு சீட்டு விநியோகம்-சற்று முன் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு..!

 


கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார். ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 வரை கடவுச்சீட்டுகளும் வழக்கமான சேவையின் கீழ் சுமார் 1000 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாவும் வழக்கமான சேவைக்கு 10,000 ரூபாவும் அறவிடப்படுகிறது. கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையில் ஏதேனும் தெளிவின்மை இருந்தால், கால தாமதங்கள் ஏற்படக்கூடும். எனவே, கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது மக்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழில் கவனம் செலுத்தி, அவை தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post